இன்று 5/07/2021 காலை. சமீபத்தில் ஒரு புதுப்பழக்கம் எனக்குத் தோறியிருக்கிறது. ஸ்ரீராதாகிருஷ்ணா தொலைக்காட்சித் தொடரை HOTSTAR மூலம் பார்க்க ஆரம்பித்து 100 episodes பார்த்துவிட்டோம். சினிமாவுக்கு இணையாக விறுவிறுப்பான திரைக்கதை. ஒவ்வொரு episode முடிவிலும் கிருஷ்ணர் ஒரு தத்துவம் சொல்லுவார்.
மற்ற தொலைக்காட்சித் தொடர்களைவிட புராண இதிகாசத் தொடர்பார்ப்பது நன்றாக இருக்கிறது. இத் தொடரில் அனைத்து நடிகர்களும் நன்றாகவே நடிக்கிறார்கள். கிராபிக்ஸ் நன்றாக இருக்கிறது. மொழியும் கவர்ந்திழுக்கிறது. அதற்காக எல்லாமே நன்று என்றும் சொல்லிவிட முடியாது. சில கமர்சியல் காரணங்களுக்காக தொடரை ஜவ்வு போல நீட்டமுயன்றிருக்கிறார்கள் சில இடங்களில். அதுபோன்ற தொய்வு ஏற்படுத்தும் இடங்களை நாம் ரிமோட்டை அழுத்திக் கடந்து போய்விடும் வசதியிருப்பதால் பெரிய இக்கட்டிலிருந்தும, விளம்பரங்களில் இருந்தும் தப்பிவிடலாம்.
மிக முக்கியமாக, பல தாக்கங்களை இந்தத் தொடர் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறதைச் சொல்லியே ஆகவேண்டும். இது போல மற்ற புராணத் தொடர்களையும் பார்க்கும் எண்ணம் இருக்கிறது!